🟣திருச்செந்தூர் அருகே மாயமான பவர் பிளான்ட் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
🟣தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டனம் பிரசாத் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பாலகண்ணன் (40). இவர் உடன்குடி பவர் பிளான்டில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது மகள் பேச்சியம்மாள் என்பவர் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளிததார்.
🟣புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் பாலகண்ணன் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. கடந்த 7ம் தேதி அவர் நண்பர்கள் சிலருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து ஜே.ஜே. நகர் கடற்கரை பகுதியில் உடலை புதைத்தது தெரியவந்தது.
🟣இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிந்து, திருச்செந்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பாலகண்ணன் உடல் நாளை தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது