
காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த என்கவுன்டரில் மேஜர் போலீஸ் டிஎஸ்.பி.., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.*காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியி்ல் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் ராணுவ கர்னல் மன்பிரீத்சிங் மேஜர் ஆசிஷ் தான்சாக் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.முன்னதாக ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ராணுவ ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தது. மேலும் ராணுவத்தின் மோப்ப நாய் படையை சேர்ந்த ஆறு வயது கொண்ட பெண் லேப்ரடார் வகையை சேர்ந்த மோப்ப நாய் ஒன்றும் என்கவுன்டரில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.