திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கெடுமா இல்லை நடவடிக்கை எடுக்குமா காவல்துறை மக்கள் கேள்வி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் சாலைகளில் உள்ள அட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அள்ளி அதனை எடைக்கு போட்டு தினம்தோறும் தங்களின் வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு முதியவர் வழக்கமாக தனது பணியை மேற்கொள்ளும் போது சுமார் எட்டு மணி அளவில் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிர்புறமாக குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த அந்த முதியவர் தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு வழக்கமாக அவர் அணியும் கைலியை கட்டிக்கொண்டு அந்தப் பகுதி முழுவதும் ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றார் இது குறித்து இந்த சட்டையின் தொப்பியும் உங்களுக்கு எங்கு கிடைத்தது என கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் காவல்துறையினர் அணியும் இந்த சீருடை எவ்வாறு இவருக்கு கிடைத்தது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியும் சலசலப்பையும் ஏற்படுத்தியது மேலும்இதுபோன்று பலருக்கும் இந்த சீருடை கிடைத்தால் சட்டவிரோத செயல்கள் அதிகமாகும் இதனால் காவல்துறையினருக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா அல்லது சட்ட ஒழுங்கு சீர்கேடும் வரை காத்திருக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்