கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூரில் விஸ்வகர்மா மக்கள் மையம் நல சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்லாண்டிபட்டியில் உள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் ஸ்ரீ விஸ்வகர்மா உருவப்படத்துக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பின்னர் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரசாத பைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கோபால் மாவட்ட செயலாளர் , செல்வராஜ் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் மத்திய மண்டல அமைப்பாளர் சண்முகம், மாநில செயற்குழு தலைவர் மகேஷ், கரூர் மாவட்ட செய்தி தொடர்புள்ள முத்துசாமி, கரூர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன், கரூர் மாவட்டம் அமைப்பாளர் செல்வகணேஷ் மற்றும் விஸ்வகர்மா மக்கள் மைய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்