நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார்.
மேற்படி இறந்த சிறுமி, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.இன்று அவரது உடல் உடற்கூறு ஆய்விற்க்குபின் விஜய் ஆன்டனியிடம் ஒப்படைக்க உள்ளனர் மருத்துவர்கள் இந்த திடீர் சம்பவத்தால் சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்