தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு என்னதான் சோதனை காலமோ தெரியவில்லை
கொலை கொள்ளை என நாளுக்குநாள் க்ரைம் ரேட்டிங் எகிறி கொண்டே செல்கிறது
மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே உள்ள ஊர்மேணி அழகியான் பகுதியை சேர்ந்த வயதான தம்பதிகள்
குலசேகரன் இராமலட்சுமி ஆகியோர்
அவர்களது வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்த போது
அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் மின் இனைப்பை துண்டித்து கதவை உடைத்து
வீட்டில் புகுந்து தூங்கி கொண்டிருந்த வயதான தம்பதிகளை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இரண்டு மூன்று நகைகள் அனிந்திருந்தும் பெயரளவிற்க்கு ஒரு நகையை மட்டும் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர் கொள்ளையர்கள்
இந்த படுபாதக செயலை செய்துவிட்டு சென்றிருக்கும் கொள்ளையர்கள் சைக்கோ கொள்ளைகாரனாக இருக்குமோ அல்லது நாட்டையே உலுக்கிய பவாரியா கொள்ளைகார்ர்கள் மீண்டும் தமிழகத்திற்க்குள் வந்து விட்டார்களா என அஞ்ச தோன்றுகிறது
இது குறித்து ஆய்குடி சரக சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரோந்து செல்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
வழிப்பறி கொள்ளையர்களை தென்காசி போலீசார் அடக்குமா அல்லது அடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்