திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிவாடி பகுதியில் வழக்கமாக திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்குசெல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக கன்னிவாடி பேரூராட்சி அருகே நிறுத்தப்பட்டிருந்தது அப்போது பேருந்தை இயங்கிய நிலையிலேயே விட்டுச் சென்ற பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் திடீரென பயணிகளுடன் தானாக நகர்ந்து சென்றதில்அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது தரிகட்டு மோதியதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது மேலும் அங்கிருந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர் இல்லாமல் வருவதை கண்டு அலரி அடித்துக் கொண்டு ஓடினர் பின்பு உள்ளிருந்த பயணிகள் ஒருவர் வேகமாகச் சென்று பேருந்து நிறுத்தினார்
இதனால் அந்தப் பகுதியில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது பின்பு சேதம் அடைந்த வாகனத்தின் உரிமையாளர்கள் சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஓட்டுனரின் இந்த அலட்சியத்தால் நான் இந்த விபத்து நடந்தது என கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது