ரேஷன் கடைகளில் இனி வரும் காலங்களில் கருவிழி ஸ்கேன் மூலம் தான் பொருட்கள் வழங்கப்படவுள்ளது…
தமிழக ரேஷன் கடைகளில் தற்போது கைரேகை மூலம் பொருட்களை பெறும் வசதி அமலில் உள்ளது. அதனை கருவிழி ஸ்கேனாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதற்கான டெண்டர், ஓயாசிஸ் நிறுவனத்திடம் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழி சரிபார்க்கும் கருவிகள் வழங்க இருக்கின்றனர.