தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புகோவிலில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை ஒன்று உள்ளது.இந்த ஆட்டுசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக
இருந்ததாக வியாபாரிகள் கூறினர்..
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டும் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர் .
கடந்த சில வாரங்களாக போதிய அளவு ஆடுகள் விற்பனை இல்லாமல் இருந்த நிலையில் இந்த வாரம் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர். வரும் வியாழகிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இந்த வாரம் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
மேலும் கடையநல்லூர், புளியங்குடி ,சுரண்டை, தென்காசி, சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் ஆடுகளை வாங்குவதற்காக வந்திருந்தனர் .மேலும் சுமார் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.ஆடுகள் 5000 ருபாய் 10000 ருபாய் 15000 ருபாய் 20000 ருபாய் என தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த வாரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததாகவும் வியாபாரிகள் கூறினர். வழக்கத்தை விட ஆட்டுச் சந்தையில் கூட்டம் கலை கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது…..