நாடாளுமன்ற தேர்தல் – 2024 – கோக்கு மாக்கு
தமிழக அரசியல் மற்றும் தேர்தல்களில் எப்பொழுதுமே அரசு ஊழியர்களின் பங்களிப்பு அதிகமா இருக்கும்
குறிப்பா சொல்லனும்னா எந்த ஒரு தேர்தல்னாலும் இவர்களது வாக்கு வங்கி மிக முக்கிய திருப்பமா இருக்கும்
அதனாலயே இவங்கள ஆளுங்கட்சி சாதகமாமே இருக்குற மாதிரி வச்சுக்கும் . அதுலயும் திமுக ரொம்ப நெருக்கமாவே வச்சுக்கும் இவங்களன்னு சொல்றாங்க
ஆனா இதுல விதிவிலக்கு நம்ம போலீஸ் காரங்க மட்டும் தான்
ஏன்னா ஆளுங்கட்சிகாரங்க பண்ற அளப்பறைல எப்பவுமே ஆளுங்கட்சிகாரங்களுக்கு தபால் வாக்குல எதிரா போடுவாங்கனு ஆளுங்கட்சிகாரங்க நினைப்பாங்கன்னு ஒரு பேச்சும் அடிபடுது
குறிப்பா திமுக எப்பவுமே எந்த தேர்தல் வந்தாலும் இவங்கள தள்ளி வச்சுதான் பாப்பாங்களாம்
இந்த நிலைமைல தான் 2024 நாடாளுமன்ற தேர்தல்ல தபால் ஓட்டுல காவல் துறைய கண்டுக்காம விட்டுட்டாங்க
இத நாம செய்தியா போட்டதும் இப்பதா அவங்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கைய ஆரமிச்சிருக்காங்க
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்க இந்த நேரத்துல ஏன் காவல் துறைக்கு மட்டும் இவ்வளவு லேட்டுனு நம்ம காவல் துறை நண்பர்கள் கிட்ட விசாரிச்சு பாத்தா எங்கே தங்களுக்கு எதிரா இவங்க ஓட்டு எல்லாம் போட்ருவாங்களோனு பயந்து ஆளுங்கட்சியான திமுக காரங்க இப்படி பண்ணிருப்பாங்கனு சொல்றாங்க
மேலும் ஏற்கனவே தமிழக அரசியல் களம் திமுக அதிமுக தாண்டி இப்ப பிஜேபி களத்துல சரிக்கு சரியா போட்டிபோடுது
இந்த நேரத்துல இவங்க ஓட்டு போட்டா ஜெயிக்கிறது கஷ்டம்னு கூட தாமதப்படுத்தலாம்னு சொல்றாங்க நமக்கு தகவல் தந தவர் இன்னொரு யோசனையும் சொல்றாரு என்னனா எலக்சன் பூத்துக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசாரை அந்தந்த பூத்திலே வாக்கு செலுத்த சொல்லலாம் இதனால அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெருவார்கள் என்று இதுவும் சரிதானே