
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் கழக செயலாளரான சுடலை என்பவருக்கும் மாவட்ட பிரதிநி மற்றும் மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவருமான சண்முகம் என்பவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் சாலையில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை சுடலை தனது இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நிலைகுலைந்த அவர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்த அவர் கூறுகையில் “ஏற்கனவே சுடலை தன்னை அலுவலகத்திற்கு அழைத்து மிரட்டியதாகவும் பின்னர் தன் மேல் ஏற்பட்ட விரோதம் காரணமாக தன்னை கத்தியால் குத்தியதாகும் அவர் தெரிவித்துள்ளார்.திமுக பிரமுகர்களிடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலால் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.