கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர். தரைப்பகுதியில் உள்ள போலீஸ் ,வனத்துறை சோதனை சாவடிகளை தாண்டி போர்வெல் , மண்அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வருகின்றன. இருந்த போதும் இதன் மீது வனத்துறை , வருவாய்துறை, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கின்றனர்.
கனிமவளத்துறையினர் இங்கு நடக்கும் தடைசெய்த பணிகளை கண்டு கொள்ளாது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர்