கோக்கு மாக்கு
Trending

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்

அன்புமணி ராமதாஸ் பேச்சு :

இதோ இங்கு நிற்கும் வேட்பாளர் உங்களில் ஒருவர். அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு மது ஒழிப்பு போராளி. அதற்காக அவர் சிறையிலும் இருந்தார். இந்த தேர்தல் நமக்கு ஒரு முக்கியமான தேர்தல். தேர்தலுக்கு முன்பாகவே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தான் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திலகபாமா ஏன் இங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்கு இந்த ஒரு காரணம் போதும். திலகபாமா வெற்றி பெற்றால் பாரத பிரதமரிடம், தொகுதிக்கான திட்டங்களை உரிமையுடன் கேட்டு பெறுவார். அது என்னுடைய கடமையும் கூட. பிரதமர் அவர்களை எனக்கு நன்கு தெரியும். அவருக்கும் என்னை நன்கு தெரியும். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட முறை அவரை சந்தித்து இருக்கிறேன்.

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் மூத்த தலைவர் ராமதாஸ் என்றும், அவருடைய அனுபவத்தையும் ஒரு அன்புமணி ராமதாசின் திறமையும் தமிழ்நாட்டிற்கு தேவை என்று பேசினார். இப்படிப்பட்ட பிரதமரை நானும் திலகபாமாவும் சந்தித்து தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை கேட்டுப் பெறுவோம். எதிரணியில் இருக்கும் யாராவது பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முடியுமா? முதலாவதாக டெல்லிக்கு செல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. அதனால் உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். உங்கள் வாக்குகளை திலகபாமாவிற்கு அளியுங்கள். திலகபாமா பட்டிவீரன்பட்டியைச் சார்ந்த சௌந்தரபாண்டியனாரின் மகள் வழி பேத்தியாவார். நல்லதொரு கவிஞர். எழுத்தாளர். சிந்தனையாளர். பெண்ணுரிமை போராளி. தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சனை என்றாலும் அவருக்கு தூக்கம் வராது. நீங்கள் அங்கே செல்லுங்கள். அறிக்கை கொடுங்கள் என்று என்னை தொந்தரவு பண்ணி விடுவார். பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் நேரடியாக சென்று அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் திலகபாமா. இப்படிப்பட்ட ஒருவரை கண்டிப்பாக நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு நீங்கள் வாய்ப்புத்தர தவறி விட்டீர்கள். தவறான நபரை தேர்வு செய்ததால் தொகுதிக்கான எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இந்த தேர்தலிலும் அந்த தவறை செய்யாதீர்கள். காமராஜரும் அண்ணாவும் நேர்மையானவர்கள் அதனால் தான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி சின்னத்தை மட்டுமே பார்த்து பலகாலமாக வாக்களித்து வந்திருக்கிறோம் இப்போது இருப்பவர்கள் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது தகுதி இல்லாதவர்கள் சாராயம் விற்கிகிறவர்கள் போதைப்பொருள் இருக்கிறவர்கள் கொள்ளையடிப்பவர்கள் இப்படிப்பட்ட வேட்பாளர்களைத் தான் நிறுத்தி வருகிறார்கள். ஆகவே இனிமேலாவது நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்ட கால கோரிக்கை சிறிய மாவட்டங்களாக பிரித்தால் தான் நிர்வாகம் எளிதாக செய்ய முடியும் கடந்த காலங்களில் அப்படி பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில குறுமன்னர்கள் மாவட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் அதிகாரம் குறைவதைப் பற்றி யோசிக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 29 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் முக்கியமானது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழனி மாவட்டத்தை உருவாக்குவோம் என்றார்கள். மூன்றாண்டுகள் ஆகியும் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த இரு கட்சிகளும் எப்போது ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதே குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் மது பழக்கத்திற்க அடிமையாக்கி விட்டார்கள். இன்னுமா இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் தெருத்தெருவாக சகஜமாக கிடைக்கிறது. ஒரு வருடம் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவனை மீட்டெடுப்பது கடினம். ஒரு மருத்துவராக இதைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பி எங்களுக்கு வாக்களியுங்கள்.

அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ பேசவில்லை மறுவுப்பூர்வமாக பேசுகிறேன் எங்களை பார்த்து கொள்கைக்கான கூட்டணி கிடையாது என்று சொல்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்றால் வெவ்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் இணைவது வழக்கம். இப்போது நாங்கள் கூட்டணி வைத்திருக்க கட்சிகள் அனைத்துக்கும் ஒரே கொள்கை மது ஒழிப்பு மட்டுமே.

கேரளாவில் ராகுல் காந்தியை போட்டியிடக் கூடாது என விரட்டி அடிக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ராகுல் காந்தியை ராகுல் காந்தியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரசும் திமுகவும் கட்சத் தீவை தாரை வார்த்து கொடுத்ததால் தான் நம்முடைய மீனவர்கள் இன்னொரு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 6,100 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி கண்டிப்பாக கட்சத் தீவை மீட்பார். அது எங்களால் முடியும் உங்களால் முடியாது.

ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கேள்வி. அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, சேகர்பாபு, கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களுக்கு ஏன் முன்னுரிமை. என்ன காரணம். உங்கள் கட்சியில் திறமையானவர்கள் உழைத்தவர்கள் யாரும் இல்லையா?

சமூகநீதி ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மதிக்கிறாரா வேங்கை வழியில் அந்த குற்றவாளிகளை இன்று வரை பிடித்துள்ளீர்களா அமைச்சரவை பட்டியலில் இருக்கின்ற 34 பேரில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மூன்று அமைச்சர்களுக்கு கடைசி இடங்களை வழங்கி இருக்கிறீர்கள் இதுதான் சமூக நீதியா நீங்கள் எல்லாம் சமூக நீதி குறித்து பேசலாமா ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர்கள் எல்லாம் அமைச்சர்கள் அல்ல வியாபாரிகள் பதவியை வைத்து வியாபாரம் செய்பவர்கள்.

எந்த ஒரு வழக்கும் கேசும் போராட்டமும் இல்லாத ஒரு இட ஒதுக்கீடு இந்தியாவில் உண்டு. நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஆல் இந்தியா மெடிக்கல் கோட்டாவில் பழங்குடியின சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கியவன் அன்புமணி ராமதாஸ். உண்மையான சமூக நீதி.

மருத்துவர் ஐயா சமூக நீதிப் பேசுபவர் பிஜேபி சமூக நீதிக்கு எதிரானது இவர்களுடைய கூட்டணி எப்படி பொருந்தும் என பேசிக்கொள்கிறார்கள்
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் சமூக நீதியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

நாங்கள் சாதிவாரி கணக்குக்கெடுப்புக்கு எதிரான கூட்டணி அல்ல. கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டிய தீருவோம் என முதல்வர் சித்தாராமையா சொல்கிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் வாயை திறக்கவில்லை.

இரு ஆட்சிக்கு முன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

சமூகநீதி குறித்து ஸ்டாலிக்கும் தெரியாது, அவர் பையனுக்கும் தெரியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அன்புமணி ஆற்றிய உரையின் விபரம்

அன்புமணி ராமதாஸ் பேச்சு :

இதோ இங்கு நிற்கும் வேட்பாளர் உங்களில் ஒருவர். அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு மது ஒழிப்பு போராளி. அதற்காக அவர் சிறையிலும் இருந்தார். இந்த தேர்தல் நமக்கு ஒரு முக்கியமான தேர்தல். தேர்தலுக்கு முன்பாகவே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தான் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். திலகபாமா ஏன் இங்கு வெற்றி பெற வேண்டும் என்பதற்கு இந்த ஒரு காரணம் போதும். திலகபாமா வெற்றி பெற்றால் பாரத பிரதமரிடம், தொகுதிக்கான திட்டங்களை உரிமையுடன் கேட்டு பெறுவார். அது என்னுடைய கடமையும் கூட. பிரதமர் அவர்களை எனக்கு நன்கு தெரியும். அவருக்கும் என்னை நன்கு தெரியும். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட முறை அவரை சந்தித்து இருக்கிறேன்.

சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் மூத்த தலைவர் ராமதாஸ் என்றும், அவருடைய அனுபவத்தையும் ஒரு அன்புமணி ராமதாசின் திறமையும் தமிழ்நாட்டிற்கு தேவை என்று பேசினார். இப்படிப்பட்ட பிரதமரை நானும் திலகபாமாவும் சந்தித்து தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை கேட்டுப் பெறுவோம். எதிரணியில் இருக்கும் யாராவது பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முடியுமா? முதலாவதாக டெல்லிக்கு செல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. அதனால் உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். உங்கள் வாக்குகளை திலகபாமாவிற்கு அளியுங்கள். திலகபாமா பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியனாரின் மகள் வழி பேத்தியாவார். நல்லதொரு கவிஞர். எழுத்தாளர். சிந்தனையாளர். பெண்ணுரிமை போராளி. தமிழ்நாட்டில் எந்த ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றாலும் அவருக்கு தூக்கம் வராது. நீங்கள் அங்கே செல்லுங்கள். அறிக்கை கொடுங்கள் என்று என்னை தொந்தரவு பண்ணி விடுவார். பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் நேரடியாகச் சென்று அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் திலகபாமா. இப்படிப்பட்ட ஒருவரை கண்டிப்பாக நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு நீங்கள் வாய்ப்புத்தர தவறி விட்டீர்கள். தவறான நபரை தேர்வு செய்ததால் தொகுதிக்கான எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இந்த தேர்தலிலும் அந்த தவறை செய்யாதீர்கள். காமராஜரும் அண்ணாவும் நேர்மையானவர்கள். அதனால் தான் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி சின்னத்தை மட்டுமே பார்த்து பலகாலமாக வாக்களித்து வந்திருக்கிறோம். இப்போது இருப்பவர்கள் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது. தகுதி இல்லாதவர்கள், சாராயம் விற்கிகிறவர்கள், போதைப்பொருள் இருக்கிறவர்கள் கொள்ளையடிப்பவர்கள் இப்படிப்பட்ட வேட்பாளர்களைத் தான் நிறுத்தி வருகிறார்கள். ஆகவே இனிமேலாவது நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நீண்ட கால கோரிக்கை. சிறிய மாவட்டங்களாக பிரித்தால் தான் நிர்வாகம் எளிதாக செய்ய முடியும். கடந்த காலங்களில் அப்படி பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திமுக அதிமுகவைச் சேர்ந்த ஒரு சில குறுமன்னர்கள் மாவட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் அதிகாரம் குறைவதைப் பற்றி யோசிக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 29 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் முக்கியமானது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழனி மாவட்டத்தை உருவாக்குவோம் என்றார்கள். மூன்றாண்டுகள் ஆகியும் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த இரு கட்சிகளும் எப்போது ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதே குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டார்கள். இன்னுமா இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்.

அமெரிக்காவில் கிடைக்கும் போதை பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் தெருத்தெருவாக சகஜமாக கிடைக்கிறது. ஒரு வருடம் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அவனை மீட்டெடுப்பது கடினம். ஒரு மருத்துவராக இதைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பி எங்களுக்கு வாக்களியுங்கள்.

அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ பேசவில்லை. உணர்வுப்பூர்வமாக பேசுகிறேன். எங்களைப் பார்த்து கொள்கைக்கான கூட்டணி கிடையாது என்று சொல்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்றால் வெவ்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் இணைவது வழக்கம். இப்போது நாங்கள் கூட்டணி வைத்திருக்க கட்சிகள் அனைத்திற்கும் ஒரே கொள்கை மது ஒழிப்பு மட்டுமே.

கேரளாவில் ராகுல் காந்தியை போட்டியிடக் கூடாது என விரட்டி அடிக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ராகுல் காந்தியை ராகுல் காந்தியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

காங்கிரசும் திமுகவும் கட்சத் தீவை தாரை வார்த்து கொடுத்ததால் தான் நம்முடைய மீனவர்கள் இன்னொரு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 6,100 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி கண்டிப்பாக கட்சத் தீவை மீட்பார். அது எங்களால் முடியும் உங்களால் முடியாது.

சமூக நீதி என்பது என்னவென்று ஸ்டாலினுக்கும் தெரியாது. அவரது பிள்ளைக்கும் தெரியாது. எடப்பாடிக்கு சுத்தமாகத் தெரியாது.

ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கேள்வி. அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, சேகர்பாபு, கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களுக்கு ஏன் முன்னுரிமை. என்ன காரணம். உங்கள் கட்சியில் திறமையானவர்கள் உழைத்தவர்கள் யாரும் இல்லையா?

சமூகநீதி குறித்துப் பேசும் ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மதிக்கிறாரா? வேங்கைவாசலில் அந்த குற்றவாளிகளை இன்று வரை பிடித்துள்ளார்களா? அமைச்சரவை பட்டியலில் இருக்கின்ற 34 பேரில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மூன்று அமைச்சர்களுக்கு கடைசி இடங்களை வழங்கி இருக்கிறீர்கள். இதுதான் சமூக நீதியா? நீங்கள் எல்லாம் சமூக நீதி குறித்து பேசலாமா? ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பவர்கள் எல்லாம் அமைச்சர்கள் அல்ல வியாபாரிகள். பதவியை வைத்து வியாபாரம் செய்பவர்கள்.

எந்த ஒரு வழக்கும் கேசும் போராட்டமும் இல்லாத ஒரு இட ஒதுக்கீடு இந்தியாவில் உண்டு. நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஆல் இந்தியா மெடிக்கல் கோட்டாவில் பழங்குடியின சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கியவன் அன்புமணி ராமதாஸ். அதுதான் உண்மையான சமூக நீதி.

மருத்துவர் ஐயா சமூக நீதி பேசுபவர். பிஜேபி சமூக நீதிக்கு எதிரானது, இவர்களுடைய கூட்டணி எப்படி பொருந்தும் என பேசிக்கொள்கிறார்கள்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அங்கீகாரம் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் சமூக நீதியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

நாங்கள் சாதிவாரி கணக்குக்கெடுப்புக்கு எதிரான கூட்டணி அல்ல. கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முதல்வர் சித்தாராமையா சொல்கிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் வாயை திறக்கவில்லை. இரு ஆட்சிக்கு முன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

திண்டுக்கல் வேட்பாளர் திலகபாமா பேச்சு :

தேர்தல் செலவிற்கு உண்டியல் கொடுத்து காசு கேட்பவர்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தனர். ஆனால் இன்று பாஜகவும், பாமகவும் பலமாக இருக்கும் இடங்களில் 300, 500 ரூபாய் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

MBBS + IPS = CM இந்த பார்முலா விரைவில் வரப்போகிறது.

இரட்டை இலையைப் பார்த்தவுடன் எம்ஜிஆர் என நினைத்து பொதுமக்கள் ஓட்டை குத்தி விடுவார்கள். ஆனால் இரட்டை இலையில் நிற்பது எம்ஜியாரோ ஜெயலலிதாவோ இல்லை. நம்பியார்.

ஒரு அம்மா என்னிடம் சொல்கிறார். மாசத்திற்கு 12 ஆயிரம் சாராயக்கடைக்கு போகிறது என்று. நீங்கள் மாசத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து என்ன பிரயோஜனம்?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button