திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியினர் சார்பில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு நீங்கள் போடும் ஓட்டு தலை இல்லாத முண்டத்திற்கு சாப்பாடும் தண்ணியும் வழங்குவதற்கு சமம்.
மோடி பேசுவது நமக்கு கவலை இல்லை அவர்கள் ஜெயிக்கப் போவதில்லை.
ஆனால் அதிமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தலையில்லாத முண்டத்திற்கு தண்ணீரும் சாப்பாடும் ஊற்றி விட்டால் என்ன நடக்கப் போகிறது செத்த பிணத்திற்கு கொடுத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். எனவே பிரதமர் யார் என்று சொல்லக்கூட யோகிதம் இல்லாத பிரதமர் யார் என்று சொல்ல முடியாத கட்சிக்கு உங்களுடைய ஓட்டை போட்டு உங்களுடைய ஓட்டை கேவலப்படுத்துவதை விட பிரயோஜனம் இல்லாத வாக்குகளாக மாற்றுவதை விட நீங்கள் இந்தியாவுடைய கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்.
100 நாள் வேலை திட்டம் 150 நாளாகவும் சம்பளம் 400 ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருக்கிற ராகுல் அவர்கள் ஏழைகளை காப்பாற்றுவார்.
ஏழைகள் வாழ வேண்டும் சமதர்மம் சமுதாயம் ஜனநாயக ரீதியான ஆட்சி அமைய வேண்டும் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் கைச்சின்னம் என பேசினார்.