கடையம் வட்டார பகுதியில் காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பிரச்சாரம்
நெல்லை நாடாளுமன்ற வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து கை சின்னத்தில் ஓட்டு கேட்டு கடையம் வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கடையம் யூனியன் உட்பட்டசேர்வைக்காரன்பட்டி ஊராட்சி,மடத்தூர் ஊராட்சி,மந்தியூர் ஊராட்சி ,கோவிந்த பேரி ஊராட்சி ,கீழ கடையம் ஊராட்சி உள்ளிட்ட 23 ஊராட்சிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் கடையம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .