*செங்கோட்டை புதூரில் இருந்து எஸ் வளைவு வரை போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி,தினமும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கூலித்தொழில் மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர் இத்துடன் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் செங்கோட்டை மற்றும் தென்காசியில் வந்து காய்கறிகள் மற்றும் பலசரக்கு சாமான்களை வாங்கி செல்வதும் வழக்கம்*
தினமும் இவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா பேருந்து பயன்படுத்தி வருகின்றனர், கடந்த சில மாதங்களாகவே இதே போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் அவர்கள் வேலைக்கு தாமதமாக சென்று வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது..**பேருந்தில் பயணம் செய்யும் தொழிலாளிகள் கூறுகையில் “இங்கு வேலை இல்லாத காரணத்தினால் தான் அண்டை மாநிலத்திற்கு சென்று பிழைக்கும் சூழ்நிலையில் உள்ளோம், எங்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் விதமாக நமது மண்ணை அள்ளிக் கொண்டு செல்லும் கனிம வள லாரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம், ஒன்று எங்களுக்கு வருமான வாய்ப்பு உருவாக்கித் தாருங்கள் இல்லையேல் மண்ணின் வளம் பறிபோவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறுகின்றனர்”**தினமும் காலை வேலைகளில் இந்த போக்குவரத்து நெரிசல் தொடருமானால் பாதிக்கப்பட போவது தென் மாவட்ட மக்களே என்பதை மனதில் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் நல்லதொரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதே இரு மாநில எல்லையோர மக்களின் வேண்டுகோள்..* *இதுவரை எத்தனையோ பதிவுகள் இது குறித்து வெளியிட்டிருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகம் இனிமேலும் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….!!!*