பழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் அவர்கள் பணி புரியும் காவல் நிலையத்தில்காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா சிறப்பாக நடத்திய உடன் பணி புரியும் காவலர்கள். இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர்இதனால் தங்கள் மகிழ்ச்சியடைவதாக இரண்டு காவலர்களும் தெரிவித்தனர்
