திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி வ.உ.சி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் முறையாக வழங்காததால் அதை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த மறியல் போராட்டம் காரணமாக வேடசந்தூர் – வடமதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.