பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள் இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு ஒரு சில முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது இதனை பயன்படுத்தி தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் தன்னை மாவட்ட நீதிபதி எனக் கூறி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போன் செய்து தான் சுவாமி தரிசனம் செய்ய பழனி மலை கோயிலுக்கு வருவதாகவும் அதற்கு தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார் இதனை அடுத்து காவல்துறையினரும் நீதிமன்ற ஊழியர்களும் கோவிலுக்கு சென்றுள்ளனர் அப்போது நீதிமன்ற ஊழியர்களிடம் ரமேஷ் பாபு முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அமீர் பாபு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர் நீதிபதி இல்லை என்றும் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது மேலும் பல கோயில்களில் நீதிவை எனக்கூறி மாலை மரியாதைகள் பெற்றது தெரியவந்துள்ளது இதன் அடிப்படையில் போலி நீதிபதி ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் முன்னதாக ஐஏஎஸ் அதிகாரி என கூறி ஒருவர் சைரன் வைத்த காருடன் சிக்கியது குறிப்பிடத்தக்கது
