*திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே ராமர் காலனி பகுதியை சேர்ந்த மேகலா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் மேகலா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து தப்பி சென்றுவிட்டனர்*.
*இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பெரியகுளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (20) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்*.