
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடக்கிருப்பை சேர்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார். இவர் கடந்த 19 ஆம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம் சந்தையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை நகர் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் முருகானந்தம், அக்ரி மெயின் ரோட்டை சேர்ந்த கோபால் இருவரும் முன் விரோதம் காரணமாக ரஞ்சித்குமாரை தாக்கினர். ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.