
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பான கூட்டம் மேற்கு காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் சாதுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.