
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார், தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்திருக்கோவிலூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் கலியவரதன் மகன் வசந்தகுமார், (33); இந்திய ராணுவத்தில் நாயக் ஆக ஐதராபாத்தில் பணியாற்றி வருகிறார். வசந்தகுமார், வருகிறார். வசந்தகுமார், தாய்லாந்து நாட்டில் ஐக்கிய உலக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூட்டமைப்பு சார்பில் கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றார். இதில் அவர், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். வசந்தகுமார், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.