கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் மாணவி அனு 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், மாணவி சாதனா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ஆம் இடம் பெற்றுள்ளார். இதேபோல் 1,600 மீட்டர் தொடர் ஓட்டம், வட்டெரிதல், நீச்சல் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவிகள் பிரியதர்ஷினி, புன்னியஸ்ரீ, தர்ஷினி, வைஷ்ணவி, புனிதாஸ்ரீ, கோபிகா உட்பட 10க்கும் மேற்பட்ட மாணவிகளும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.