சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பாக 108 வலம்புரி சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
கோவிலில் நேற்று முன்தினம் இரவு 108 சங்குகள் வைத்து மகாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் குருக்கள் ஜெயக்குமார் வைபவங்களை செய்து வைத்தார். கட்டளைதாரர் எரவார் வீரமணி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.