கடலூர் மாவட்டம் இராமநத்தம் பகுதியில் சேர்ந்த 24 வயதுடைய வாலிபருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இருவீட்டார் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று நவம்பர் 21 ஆம் தேதி நடக்க திருமணம் இருந்தது.
மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து திருமணத்தை தடுத்தனர். அதன்படி மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்திசெய்ய இன்னும் நான்கு மாதங்கள் இருந்ததால் திருமணம நிறுத்தப்பட்டது.
இருவீட்டாரிடமும் பெண்ணுக்கு சரியான வயது வரும்வரை திருமணம் செய்து வைக்கக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து இராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.