கள்ளக்குறிச்சியில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு குழு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கூட்டத்திற்கு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கீதா தலைமை தாங்கினார்.
விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, தொழிலாளர்களின் பங்கு, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலவாரியங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும ஈ.எஸ்.ஐ., மருத்து வசதி மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது, எனவே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.