கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கால்நடை மருத்துவ முகாம், கருத்தரங்கம், ரத்ததான முகாம், கூட்டுறவு பொருட்களின் விற்பனை மேளா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இறுதி நாளான நேற்று முன்தினம்(நவ.20) கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற தனித்திறன் போட்டிகளும் கைப்பந்து, இறகுப்பந்து, கோகோ போன்ற பல்வேறு குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.