வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் காவல் ஆய்வாளர் கௌரி, உதவி காவல் ஆய்வாளர் கணேசன் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக சோதனை மேற்க்கொண்டனர்.சோதனையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 60 ஆயிரத்து 540 ரூபாய் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாகவும், இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவார்கள் என்று லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு தகவல் தெரிவித்தார்.வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக ஆள்மாறாட்டம், போலி பத்திரங்கள் பதிவு உள்ளிட்ட சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
