மாநில அளவில் சாதனைசென்னையில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு என 5 பிரிவுகளாக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது. இதில், அரசு ஊழியர்களுக்கு கேரம், இறகுப்பந்து, தடகளம், சதுரங்கம், வாலிபால், கபடி ஆகிய 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இறகுப்பந்து போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றவர்கள் சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்றனர்.
இதில், இரட்டையர் பிரிவில் மோகன்தாஸ், சதீஷ்குமார் அணியினர் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றனர். மோகன்தாஸ் முதல் நிலை காவலராகவும், சதீஷ்குமார் கணித ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கப்பரிசு, சான்றிதழ், மெடல் ஆகியவை வழங்கப்பட்டது.