திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 27-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இதில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். மேலும், பல்வேறு துறை சார்ந்த தொழில்முனைவோருக்கான ஆலோசனைகளையும் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.