ஓசூரில் வழக்கறிஞரை கொலை செய்ய முயன்றதை கண்டித்து, கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.வழக்கறிஞர்களிடம் ஏடிஎஸ்பி மணிகண்டன் பேச்சுவார்த்தைகள்ளக்குறிச்சியில் பேரணியாகச் சென்ற வழக்கறிஞர்களை ஆயுதப்படை காவலர் தாக்கியதாக கூறி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்களிடம் கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி மணிகண்டன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் அருகே காவலர் ஒருவர் வழக்கறிஞரை தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டித்தும் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.