
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூர் ஏரிக்கு வரும் 3 பாசனக் கால்வாய்களும் செடி, கொடிகளுடன் புதன் மண்டி தூர்ந்துபோய் உள்ளதால், இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே உடனடியாக கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.