திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, இன்று கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் பகுதிகளில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி அவர்களுடன் வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கிளை கழக, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.