
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 63 நாயன்மார்களின் சிறிய ரக தேர்களை பழுது பார்த்து வண்ணம் தீட்டும் பணியில் பணியாளர்கள் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.