பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், தொல்குடியினருக்கான சிறப்பு முகாம் தொடங்கியது.
இந்த முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை பழங்குடியினர் சமூகத்தினர் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், விதவை உதவித்தொகை, மின் வசதி, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
முகாமில் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் வைதேகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அமுல், வருவாய் ஆய்வாளர் மாலதி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், மீனா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த முகாம் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.