
கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க மாணவரணி நிர்வாகிகளுக்கான மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல், கடலூர் மாநகர கழக தலைமை அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.இதில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கோ. ஐயப்பன் எம். எல். ஏ, மேயர் சுந்தரி ராஜா, திமுக மாணவரணி தலைவர் இரா. ராஜீவ்காந்தி, திமுக மாணவரணி இணை செயலாளர் எஸ். மோகன், மாணவரணி துணை செயலாளர் பி. எம். ஆனந்த் முன்னிலை வகித்தனர் மற்றும் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக சார்பணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.