காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள வானதிராயன்பேட்டையில் 2011 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்த இடத்திற்கு செல்வதற்கான சாலை வசதி இல்லாததாலும் பாழடைந்த கட்டிடத்தின் நிலையும் கவனத்திற்கு கொண்டு, அதிகாரிகளுடன் பேசிவிட்டு உடனடியாக சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை காண்பதாக இருந்த சட்டப்பேரவை குழு ஆய்வு மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் வரும் 02. 12. 2024 அன்று மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவை குழுவை இங்கு அழைத்து வந்து விவரங்களை பகிர்ந்து, பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.