கள்ளக்குறிச்சி ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ‘எங்கள் சமையல் அறை, எங்கள் பொறுப்பு’ தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர் சுந்தரம் தலைமை தாங்கி காஸ் சிலிண்டர் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் விஷ்ணுமூர்த்தி வரவேற்றார். இதில், காஸ் அடுப்பை பற்ற வைக்கும் முறைகள், காஸ் அடுப்பில் சமையல் செய்து முடித்த பின் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காஸ் கசிவு உள்ளிட்ட அவசர நிலை ஏற்பட்டால் 1906 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.இதில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண் கென்னடி, தலைவர் சுப்ரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.