அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் நீலமங்கலம் நான்கு முனை சந்திப்புப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்பு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில், அரசின் சிறப்பு திட்டங்கள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சிகள் மூலம் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பொதுமக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.