சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலக வார விழா மற்றும் சிறுதானிய உணவு விழா நடந்தது. கிளை நுாலகர் நந்தினி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், துணை தலைவர் இதயதுல்லா முன்னிலை வகித்தார்.
சங்கராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நுாலகத்தை பயன்படுத்தி டி. என், பி. எஸ். சி., தேர்வில் வெற்றி பெற்ற தேவபாண்டலம் தென்னரசன், சோழம்பட்டு சுரேஷ், வளையாம்பட்டு திருமலை, வரகூர் புருேஷாத்தமன், காவல் துறை தேர்வில் வெற்றி பெற்ற பழனிசாமி, சிவா ஆகியோருக்கு சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், இன்னர்வீல் கிளப் தலைவர் சுபாஷினி ரமேஷ, பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், ரோட்டரி தலைவர் அசோக்குமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், தாமோதரன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி மற்றும் நுாலக வாசக உறுப்பினர்ர்கள் பங்கேற்றனர். விழாவில், நல் நுாலகர் விருது பெற்ற அரசம்பட்டு நுாலகர் முருகன் கவுரவிக்கப்பட்டார்.