கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்தவர்கள் மாரியாப்பிள்ளை மனைவி வேம்பு(45), குமார் மனைவி சுமித்ரா(39), வீரசோழபுரம் ஆனந்தன் மனைவி ராஜகுமாரி(45). டோல்கேட் அருகே உள்ள சலவை நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் நேற்று முன்தினம்(நவம்பர் 21) இரவு 7:00 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றனர்.
அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் மார்க்கமாக சென்ற சுசுகி பெலினோ கார், சாலையில் பைக்கில் சென்ற பாலு, நடந்து சென்ற வேம்பு, சுமித்ரா, ராஜகுமாரி, சாலையோரம் நின்றிருந்த கவிதா ஆகியோர் மீது மோதியது. இதில், வேம்பு, சுமித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமதுபைசல்(30) என்பவரை நேற்று (நவம்பர் 22) போலீசார் கைது செய்தனர்.