வரஞ்சரம் அடுத்த கொங்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி மீனாட்சி, (47). இவருக்கு மாடி வீடும், அதற்கு பின்புறம் ‘ஷீட்’ போடப்பட்ட வீடும் உள்ளது. கடந்த 20ம் தேதி இரவு மகன் ஆனந்தபாபு வர தாமதமானதால், மாடி வீட்டின் கதவினை தாழ்ப்பாள் போடாமல், ‘ஷீட்’ வீட்டினை மட்டும் பூட்டி விட்டு மீனாட்சி துாங்கியுள்ளார்
சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த ஆனந்தபாபு மாடி வீட்டின் அறையில் துாங்கினார்.நேற்று முன்தினம்(நவம்பர் 21) காலை எழுந்து பார்த்த போது, மாடி வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 140 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கொலுசுகள், சேலைகள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.