திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 21 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் திமுகவினர், அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எவ. வே. கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை நகராட்சி மேயர நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.