
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்கனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தங்க. சாமிதுரை தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஊராட்சி செயலர் மோகன், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழுத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அருந்தவம் கருப்பையா தலைமையில்கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.