திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸார் கைது செய்தனர் தச்சூர் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதில், லாலா மகன் பாலு (46) உரிய அனுமதியின்றி ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திரந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.