
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி சாரதாம்பாள் இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார்.அப்போது டிராக்டர் என்ஜினுக்கும் டிப்பர் பெட்டிக்கும் இடையே உள்ள பகுதியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். டி. வி. புத்தூர் அருகே சென்ற போது, திடீரென சாரதாம்பாள் தவறி கீழே விழுந்த நிலையில் டிப்பர் பெட்டியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சாரதாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.