கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு, சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நடந்த ஊர்வலத்தில் பட்டாலியன் போலீசார் வழக்கறிஞரை தாக்கியது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கிய காவலர் ஸ்ரீராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு, சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து கள்ளக்குறிச்சியில் நடந்த ஊர்வலத்தில் பட்டாலியன் போலீசார் வழக்கறிஞரை தாக்கியது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கிய காவலர் ஸ்ரீராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை சங்க வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை வாபஸ் பெறக்கோரியும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.