சின்னசேலம் பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு,
கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் முனைவோர் மையம் பொது மேலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உத்யம் திட்டத்தில் பதிவு செய்வதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் நண்மைகள் குறித்தும் வணிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கனேஷ், துணை சேர்மன் ராகேஷர், அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் ஆதிசேஷன், பொருளாளர் சிவக்குமார் உட்பட சின்னசேலம் பகுதி வணிகர்கள் பங்கேற்றனர்.