
சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜென்ம தினத்தை முன்னிட்டு நேற்று கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு வடை மாலை சாற்றி, அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜைகளை ஸ்ரீதர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாககுப்பம் ஆசிரியர் விவேகானந்தன் செய்திருந்தார்.